indian women hockey team advanced to next round in world women hockey

உலக மகளிர் வலைகோல் பந்தாட்ட்ட லீக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

உலக மகளிர் வலைகோல் பந்தாட்ட்ட லீக் அரையிறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்தில் சிலிக்கும், 12-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் தவறவிட்டது.

இதன்பிறகு 38-வது நிமிடத்தில் ப்ரீத்தி கோலடிக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இந்திய வீராங்கனை ரேணுகா யாதவ், மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டதால், கடைசி கால் ஆட்டத்தில் இந்திய அணி 10 பேருடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைசி 15 நிமிடங்கள் சிலி அணி கடுமையாகப் போராடியது. இருந்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின்மூலம் தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது இந்திய அணி.