Indian tennis player progress in list of international tennis players

சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 176-வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளார். 

சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் அதிரடியாக முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்.

ஏடிபி சேலஞ்சர் சர்க்யூட் போட்டி சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அசத்தலாக வென்றதின் மூலம் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 125 புள்ளிகள் கிடைந்ததன. இதன்மூலம் அவர் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். 

மேலும், முன்னணி வீரரான யுகி பாம்ப்ரி 85-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 12-வது இடத்திலும் உள்ளனர்.

இரட்டையர் பிரிவில் போபண்ணா 23-வது இடத்திலும், சரண் 43-வது இடத்திலும், பயஸ் 50-வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று மகளிர் பிரிவில் அங்கிதா ரெய்னா 193-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.