Indian soldiers in the next round of the Indonesian Open Super Series

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் அடுத்த சுற்றில் கால்பதித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் பிரணாய் மற்றும் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா மோதினர்.

இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சினிசுகாவை தோற்கடித்து வென்றார் பிரணாய்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங் விங் கீ வின்சென்டுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வின்சென்டை தோற்கடித்து வெற்றிப் பெற்றார் ஸ்ரீகாந்த..

இருவரும் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர்.