Asian Games 2023: ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஹாக்கி போட்டியில் ஹாக்கி இந்தியா டீம் 16-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Indian mens hockey team beat Uzbekistan by 16-0 in Asian Games 2023 group stage match at Hangzhou, China

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த தொடக்க விழாவில் அனைத்து அணிகளும் சிறப்பு அணி வகுப்பு நடத்தினர். இந்தியா சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் இருவரும் இணைந்து தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடந்தினர்.

IND vs AUS, Jasprit Bumrah: 2ஆவது ODIல் பும்ரா இல்லையா? என்ன காரணம் தெரியுமா?

இதையடுத்து இன்று காலை முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த மகளிருக்கான கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நாளை காலை 11.30 மணிக்கு நடக்கிறது.

IND vs AUS, 2nd ODI: ஆஸியில் அதிரடி மாற்றங்கள், கேப்டனான ஸ்மித்; இருக்கு, இந்தப் போட்டியில் சம்பவம் இருக்கு!

காலை 6.30 மணிக்கு நடந்த படகு போட்டியில் இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இதே போன்று படகோட்டுதலில் நடந்த மற்றொரு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லெக் ராம் மற்றும் பாபு லால் யாதவ் ஆடவர் ஜோடி இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன், இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தையும், இரண்டாவது படகுப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன் மூலமாக இந்தியா 3 வெள்ளிப் பதக்கமும் ,2 வெண்கலப் பதக்கமும் பெற்று பதக்கப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. சீனா 11 தங்கமும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், 16-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. வரும் 26 ஆம் தேதி நடக்கும் Pool A ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது.

National Daughters Day 2023- மகளோடு கொஞ்சி விளையாடிய ரோகித் சர்மா; வைரலாகும் புகைப்படம்!

லலித் குமார் உபாத்யாய் நான்கு கோல்கள் அடித்து இந்தியாவின் நட்சத்திர நாயகனாக இருந்தார், மந்தீப் சிங் மற்றும் வருண் குமார் ஆகியோர் தலா ஒரு ஹாட்ரிக் கோல் அடித்தனர். சுக்ஜீத் சிங், சஞ்சய், அமித் ரோஹிதாஸ், ஷம்ஷேர் சிங் மற்றும் அபிஷேக் ஆகியோர் 3 முறை ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios