Indian football team defeat kenya

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கெத்து காட்டியது.

இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில், நான்கு நாடுகள் பங்கேற்கின்றன.

நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொண்டது இந்தியா. இதில் 3-0 என அபார வெற்றி பெற்றது. தனது 100-வது சர்வதேச ஆட்டத்தில் விளையாடும் கேப்டன் சுனில் சேத்ரி கோலடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

தைபேவுடன் நடந்த ஆட்டத்தில் வெறும் 2000 பார்வையாளர்களே வந்திருந்த நிலையில் கால்பந்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேப்டன் சேத்ரி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு கிரிக்கெட் வீரர்கள் கோலி, டெண்டுல்கரும் ஆதரவு தந்தனர். 

இந்த நிலையில் இந்தியா - கென்யா ஆட்டத்தைக் காண 9000 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர்.

வரும் வியாழக்கிழமை நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்தப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.