Asianet News TamilAsianet News Tamil

Neeraj Chopra: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரசிகருக்கு பம்பர் பரிசு – ரூ.1,00089 பரிசு அறிவித்த ரிஷப் பண்ட்!

ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றினால் ரசிகர் ஒருவருக்கு 100089 ரூபாய் பரிசாக கொடுக்க உள்ளதாக ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார்.

Indian Cricketer Rishabh Pant ready to Give Rs 100089 To Fans If Javelin Throw star Neeraj Chopra will win Gold at Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 7, 2024, 7:17 PM IST | Last Updated Aug 7, 2024, 7:17 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. மனு பாக்கர், சரப்ஜோத் சிங் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகியோர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர். எனினும், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றாதது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கைப்பற்றும் சூழல் இருந்தது.

பதும் நிசாங்கா – அவிஷ்கா ஃபெர்னாண்டோ அதிரடி ஆட்டம் – இலங்கை 248 ரன்கள் குவிப்பு: ரியான் பராக் 3 விக்கெட்!

ஆனால், கூடுதல் எடை காரணமாக அவர் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் கைப்பற்றிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 89.34 மீ தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை இரவு 11.55 மணிக்கு ஈட்டி எறிதல் போட்டி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் – இறுதிப் போட்டி யார் யாருக்கு? மாற்று வீராங்கனை யார்? வெண்கலப் பதக்கம் யாருக்கு?

இந்த நிலையில் தான், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றால் ரசிகர் ஒருவருக்கு ரூ.1,00,089 பரிசாக கொடுக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தன்னை கவரும் டாப் 10 ரசிகர்களுக்கு விமான டிக்கெட் பரிசாகவும் கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். நாளை இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், தனது இந்த எக்ஸ் பதிவை லைக், கமெண்ட் செய்யும் ஒரு லக்கி ரசிகருக்கு ரூ.1,00,089 வழங்கப்படும். அதோடு, தன்னை கவரும் டாப் 10 ரசிகர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios