இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா ஜோடி ஆக்லாந்து ஓபன் (ஏஎஸ்பி கிளாசிக்) டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பயஸ் - சா ஜோடி தங்களின் முதல் சுற்றில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி - அமெரிக்காவின் டிரீட் ஹுவே ஜோடியை வென்றது.

ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பயஸ் - சா ஜோடி, இந்த ஆட்டத்தை ஒரு மணி, 14 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது.

பயஸ் - சா ஜோடி தங்களின் காலிறுதியில் வைல்ட்கார்டு ஜோடியான நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெலோலைனர் ஜோடியைச் சந்திக்கின்றனர்.