ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது.  முதல் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது.

இந்த போட்டியில் வென்று வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவிடம் வாங்கிய அடிக்கு, இந்தியாவை வீழ்த்தி உத்வேகம் பெறும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

சற்று முன்னர் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. 

முதல் டி20 போட்டியில் ஆட உள்ள 12 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), டார்ஷி ஷார்ட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பென் மெக்டெர்மோட், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ஜேசன் பெரெண்டோர்ஃப், பில்லி ஸ்டேன்லேக்.