Asianet News TamilAsianet News Tamil

India vs Chinese Taipei: கபடியில் தங்கம் வென்ற இந்தியா – 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் கைப்பற்றியுள்ளது.

India won gold in Women Kabaddi After Beating Chinese Taipei and mark record of 100 medals in asian games 2023 at Hangzhou
Author
First Published Oct 7, 2023, 9:38 AM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் சீன தைபே பெண்கள் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே இந்திய அணி புள்ளிகள் பெற்று வந்தது. இந்திய அணி வீராங்கனை பூஜா முதல் புள்ளி பெற்றுக் கொடுத்தார். அடுத்ததாக புஷ்பா புள்ளிகள் பெற இந்திய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தது. இதையடுத்து சீன தைபே அணி 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தது.

PAK vs NED: நேற்று அகமதாபாத், இன்று ஹைதராபாத் – வெறிச்சோடி காணப்பட்ட மைதானங்கள்!

அதன் பிறகு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் இந்திய வீராங்கனை ஒரே ரைடில் 4 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து இந்திய அணியின் புள்ளிக் கணக்கு ஒவ்வொன்றாக இருந்தது. இதே போன்று சீன தைபே அணியும் ஒவ்வொரு புள்ளியாக பெற்று வந்தது.

பேட்டிங்கில் கோட்டைவிட்டாலும் பவுலிங்கில் சாதித்து காட்டிய பாகிஸ்தான் – 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 24-24 என்று சமநிலையில் இருந்தன. இதையடுத்து இந்திய வீராங்கனை புஷ்பா அடுத்தடுத்து 2 புள்ளிகள் பெறவே 26-25 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இதன் மூலமாக ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ICC World Cup 2023: கில் நலமாக இருக்கிறார் – 36 மணி நேரத்திற்கு பிறகு முடிவு செய்வோம் – ராகுல் டிராவிட்!

இதுவரையில் நடந்த போட்டிகளின் படி, இந்தியா 25  தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 100 பதக்கங்களுடன் தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios