Asianet News TamilAsianet News Tamil

பேட்டிங்கில் கோட்டைவிட்டாலும் பவுலிங்கில் சாதித்து காட்டிய பாகிஸ்தான் – 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Pakistan Beat Netherlands by 81 Runs Difference in 2nd Match of Cricket World Cup 2023 at Hyderabad rsk
Author
First Published Oct 6, 2023, 10:36 PM IST | Last Updated Oct 6, 2023, 10:36 PM IST

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அனிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. அதற்கு முன்னதாக இரு அணிகளும் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைகளில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது.

ICC World Cup 2023: கில் நலமாக இருக்கிறார் – 36 மணி நேரத்திற்கு பிறகு முடிவு செய்வோம் – ராகுல் டிராவிட்!

இந்த 2 உலகக் கோப்பை போட்டிகள் தவிர 4 ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தான் 3ஆவது முறையாக இரு அணிகளும் இன்றைய போட்டியின் மூலமாக விளையாடுகின்றன. ஏற்கனவே உலகக் கோப்பை போட்டி உள்பட 6 போட்டிகளில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசியது.

India vs Japan: நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாக்கி டீம் தங்கம் கைப்பற்றி சாதனை!

நெதர்லாந்து:

விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், ஆர்யன் தத், பாஸ் டி லீட்

பாகிஸ்தான்:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் கடைசி வரை போராடி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், முகமது ரிஸ்வான் 68 ரன்களும், சவுத் சகீல் 68 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Pakistan vs Netherlands: ஒரேயடியாக நெதர்லாந்திடம் சரண்டரான பாகிஸ்தான் – ஆறுதல் கொடுத்த ரிஸ்வான், சகீல்!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவுட் 5 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் விக்ரம்ஜீத் சிங் 52 ரன்கள் குவித்தார். பாஸ் டி லீட் மட்டும் நிலையாக நின்று ரன்கள் சேர்த்தார். அவர் 68 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நெதர்லாந்து, கண்டிப்பாக இந்தப் போட்டியில் ஜெயிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தோல்வி அடைந்தது. பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, நெதர்லாந்து 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Pakistan vs Netherlands: வரிசையாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள்: பிளான் போட்டு தூக்கிய நெதர்லாந்து பிளேயர்ஸ்!

பேட்டிங்கில் கோட்டைவிட்டாலும் பாகிஸ்தான் பவுலிங்கில் சாதித்து காட்டிவிட்டது. பாகிஸ்தான் பவுலர்களில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டும், இப்திகார் அகமது, ஷாகீன் அஃப்ரிடி, ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். உலகக் கோப்பை வரலாற்றில் 275க்கு அதிகமாக ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து 13வது வெற்றி கிடைத்துள்ளது.

MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios