ICC World Cup 2023: கில் நலமாக இருக்கிறார் – 36 மணி நேரத்திற்கு பிறகு முடிவு செய்வோம் – ராகுல் டிராவிட்!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் தற்போது நலமாக இருப்பதாகவும், மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்டேட் கொடுத்துள்ளார்.

Rahul Dravid Gives Important update About Shubman Gill Health Condition rsk

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

India vs Japan: நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாக்கி டீம் தங்கம் கைப்பற்றி சாதனை!

ஆனால், அதற்குள்ளாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தி வார்ம் அப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது வார்ம் அப் போட்டிக்காக இந்திய அணி திருவனந்தபுரம் சென்றிருந்தது. ஆனால், அந்தப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து புறப்பட்டு இந்திய அணி சென்னை வந்தது.

Pakistan vs Netherlands: ஒரேயடியாக நெதர்லாந்திடம் சரண்டரான பாகிஸ்தான் – ஆறுதல் கொடுத்த ரிஸ்வான், சகீல்!

சென்னை வந்தது முதல் சுப்மன் கில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 8 ஆம் தேதி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரையில் ஆகும். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சுப்மன் கில் இல்லையென்றால், அவருக்குப் பதிலாக தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Pakistan vs Netherlands: வரிசையாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள்: பிளான் போட்டு தூக்கிய நெதர்லாந்து பிளேயர்ஸ்!

இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதமும், 5 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கில் உடல்நிலை குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கில் தற்போது நலமாக இருக்கிறார். மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்னும் 36 மணி நேரங்களுக்குப் பிறகு தான் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios