MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!
ஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆனால், அதன் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. தற்போது இந்தியாவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த முறை எப்படியும் இந்திய அணி டிராபியை கைப்பற்றும் என்று முன்னாள் வீர்ரகள் முதல் விஞ்ஞான ஜோதிடர்கள் வரையில் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2 உலகக் கோப்பை தோல்விக்கு பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் போட்ட நெதர்லாந்து; டாஸ் வென்று பவுலிங்!
கடந்த சில நாட்களாக மும்பையில் இருக்கும் தோனி முதலில் தெலுங்கு நடிகர் ராம் சரணை சந்தித்து பேசினார். அதன் பிறகு பாலிவுட் நடிகர் ரன்விர் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் விஜய் சேதுபதி மாதிரி தோனிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான், தோனி ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அடுத்தடுத்து நிலையான வருமானத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். முன்னதாக தோனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக எல்ஜிஎம் என்ற தமிழ் படத்தை தயாரித்தார். இந்த நிலையில் தான், ஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?
இது குறித்து பேசிய ஜியோமார்ட் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் வராகந்தி கூறியிருப்பதாவது: ஜியோமார்ட்டை போன்று நம்பிக்கை, நம்பகத்தன்மை கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை எங்களது விளம்பரதாரராக நியமித்துள்ளோம். இதன் காரணமாக டிஜிட்டல் ரீடெய்ல் ஷாப்பிங்க் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.