Asianet News TamilAsianet News Tamil

மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் சுட்டுப்படுகொலை..?

ஹரியானாவை சேர்ந்த இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் சூரஜ் ஆகிய இருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி  பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

india woman wrestler nisha dahiya and her brother shot dead in haryana
Author
Haryana, First Published Nov 10, 2021, 7:01 PM IST | Last Updated Nov 10, 2021, 7:36 PM IST

ஹரியானாவை சேர்ந்த இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவர் நிஷா தாஹியா.

இதையும் படிங்க - இதுக்கும் மேல அந்த பசங்க என்ன செய்தால் டீம்ல எடுப்பீங்க? இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் சூரஜ் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் மல்யுத்த பயிற்சி அகாடமியில் நிஷா அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

india woman wrestler nisha dahiya and her brother shot dead in haryana

நிஷா தாஹியாவின்  தாயார் தன்பதியும் பயிற்சி மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார்.  படுகாயமடைந்த நிஷாவின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நிஷா தாஹியாவின் குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளியான தகவல் இப்படுகொலை சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios