India withdraws from Uthar Cup Badminton competition


உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிரணி ஜப்பானிடம் 0-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதன் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர்.

இதில், 19-21, 21-9, 20-22 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அகானே யமாகுசியிடம் வீழ்ந்தார் சாய்னா.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அருணா பிரபுதேசாய் 12-21, 17-21 என தோற்கடிக்கப்பட்டார்.

அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சன்யோகிதா கோர்படே - பிரஜக்தா சாவந்த் இணை 15-21, 6-21 என்ற செட்களில், உலகின் 4-ஆம் நிலை இணையான அயாகா டகாஹாஷி - மிசாகி மட்சுடோமோ இணையிடம் வீழ்ந்தது.

இரட்டையர் பிரிவு 2-வது ஆட்டத்தில் வைஷ்ணவி பாலே - மேகானா ஜக்கம்புடி இணை 8-21, 17-21 என வீழ்ந்தது. 

உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட இந்திய இளம் வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, 10-21, 03-21 என்ற செட்களில் வீழ்ந்தார்.