India vs Sri Lanka Washington Sundar Replaces Injured Kedar Jadhav

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார். ஜாதவ் விலகியதால் ஏற்பட்ட இடத்துக்கு சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி, இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரி்ல் பங்கேற்கிறது. முதல் போட்டி இமாச்சல பிரதேச இரண்டாவது குளிர்காலத் தலைநகரானதரம்சாலாவில் நாளை நடக்கவுள்ளது. 

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவின் வலது தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், இவருக்குப் பதிலாக தமிழகத்தின் 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப் பட்டார். சுந்தர், இலங்கை அணிக்கு எதிராக வரும் டிச.20ம் தேதி துவங்கவுள்ள '20-20' தொடரிலும் ஏற்கெனவே இடம்பெற்றிருந்தார். 

முன்னதாக கேதர் ஜாதவ், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு மட்டுமே தேர்வு செய்யப் பட்டிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாய்ண்ட்யா,ஆக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா ஷகல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார், சித்தார்த் கவுல், வாஷிங்டன் சுந்தர்.