சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. போட்டி நடக்கும் துபாய் பிட்ச் எப்படி? என்பது குறித்த விவரங்களை பார்ப்போம். 

India vs Australia Semi Final: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மார்ச் 5 (புதன்கிழமை) விளையாடுகின்றன. 

இந்தியா பழிதீர்க்குமா?

2023 ஒருநாள் உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோத்ததை யாரும் மறக்க முடியாது. அதனால சாம்பியன்ஸ் ட்ராபியில் முக்கியமான மேட்ச்சில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் இந்தியா அதற்கு பழிதீர்த்துக் கொள்ள முடியும். 

மேட்ச் எங்கே? என்ன நேரத்தில் நடக்கப்போகுது.? 

இந்தியா, ஆஸ்திரேலியா மேட்ச் மார்ச் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். டாஸ் 2 மணிக்கு போடப்படும். 

எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்?

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். ஓடிடியில் ஜியோஹாட்ஸ்டார்ல லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் பழைய பிளான் ஆக்டிவ்ல இருக்கறவங்க புதுசா சப்ஸ்கிரிப்ஷன் எடுக்க தேவையில்லை. 

IND VS AUS: இந்தியா vs ஆஸ்திரேலியா: ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் கெத்து யார்?

பிட்ச் எப்படி இருக்கப்போகுது?

போட்டி நடக்கும் செவ்வாய்க்கிழமை துபாயில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் வானிலை மேட்ச்சில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. பிட்ச் பேட்டிங்கு சாதகமா இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனா நேரம் போகப்போக ஸ்பின்னர்களுக்கு சாதகமா மாற வாய்ப்பு இருக்கு. ஆகையால் முதலில் பேட்டிங் பண்ணும் அணிக்கு ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

யார் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது?

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா என்று பார்த்தால் இந்தியாதான் அதிகமாக‌ ஜெயித்துள்ளது. இதுவரைக்கும் இந்த ரெண்டு டீமும் நாலு தடவை போட்டி போட்டு இருக்காங்க. அதுல ரெண்டு தடவை இந்தியாவும், ஒரு மேட்ச்ல ஆஸ்திரேலியாவும் ஜெயித்துள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை.

இந்திய அணியின் உத்ததேச பிளேயிங் லெவன்: 

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி அல்லது அர்ஷ்தீப் சிங். 

ஆஸ்திரேலிய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷியஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

India vs Australia: கங்காருவை விரட்டியடிக்க இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! இதோ 3 காரணங்கள்!