- Home
- Sports
- India vs Australia: கங்காருவை விரட்டியடிக்க இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! இதோ 3 காரணங்கள்!
India vs Australia: கங்காருவை விரட்டியடிக்க இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! இதோ 3 காரணங்கள்!
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் 3 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

India vs Australia: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி நிறைவுப்பகுதியை நெருங்கி விட்டது. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை (மார்ச் 4) மோதுகின்றன.
இந்தியா-ஆஸ்திரேலியா
ஐசிசி போட்டி என்று சொன்னாலே ஆஸ்திரேலியா எப்போதும் வீறு கொண்டு விளையாடும். அதுவும் இந்தியாவுடன் என்றால் சொல்லவே வேண்டாம். கடந்த 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை பைனலை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாடடர்கள். ஏனெனில் பைனலில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டித் தூக்கியது ஆஸ்திரேலியா.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டிகளில் 151 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 84 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்தியா 57 வெற்றிகளுடன் உள்ளது. 10 போட்டிகளில் எந்த முடிவும் இல்லை.
அதே வேளையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா டாப்பில் இருக்கிறது. சாம்பியன்ஸ் போட்டியின் வரலாற்றில் இரு அணிகளும் நான்கு முறை விளையாடியுள்ளன. இந்தியா இரண்டு போட்டிகளில் வென்றது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி
ஆஸ்திரேலியா அணி 2003 மற்றும் 2023 உலககோப்பை பைனலில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தாலும் இப்போது ஆஸ்திரேலியாவை பழிதீர்க்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. இதில் முதல் காரணம் இப்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி வலுவாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதான கேப்டனும், பாஸ்ட் பவுலருமான பேட் கம்மின்ஸ், உலகின் முன்னணி பவுலர்களான மிட்ச்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், ஆல்ரவுண்டர் மிட்ச்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை.
இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி! மேட்ச் வின்னர் விலகல்? இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!
சாம்பியன்ஸ் டிராபி
இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். பென் துவர்ஷுயிஸ், நாதன் எல்லீஸ், பென்சர் ஜான்சன் என அனுபவமில்லாத பாஸ்ட் பவுலர்களே ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். ஆடம் ஜாம்பாவை தவிர பெரிய பவுலர்கள் யாரும் இல்லை. ஆஸ்திரேலியாவின் இந்த பலவீனம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அப்பட்டமாக தெரிந்தது. ஆகவே அனுபவம்வாயந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஜாம்பவை தவிர மற்ற பவுலர்களை எளிதில் சமாளித்து ரன்களை குவிக்க முடியும்.
இரண்டாவது முக்கிய காரணம் இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் அட்டாக். இந்தியாவில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என 4 பவுலர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் தடுமாறுவார்கள். அதுவும் வருண் சக்கரவர்த்தி முதன் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளதால் அவர் எப்படி போடுவார்? என்பதே அவர்களுக்கு தெரியாது.
ஆகவே இந்திய அணி நியூசிலாந்து போட்டியை போன்று இந்த 4 ஸ்பின் பவுலர்களை வைத்து அட்டாக் செய்தால் ஆஸ்திரேலியவை முடக்கி விட முடியும்.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்
மூன்றாவது காரணம் போட்டி நடக்கும் துபாய் பிட்ச். துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச்சை பொறுத்தவரை மெதுவான தன்மை கொண்டது. சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். இந்திய அணியை பொறுத்தவரை துபாய் பிட்ச்சில் மட்டுமே விளையாடுவதால் இந்த பிட்ச்சின் ஜாதகம் அனைத்தும் தெரிந்து விட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா பேட்டிங்குக்கு சாதகமான பாகிஸ்தான் மைதானங்களில் விளையாடி விட்டு முதன்முறையாக துபாய் பிட்ச்சில் விளையாடுகிறது. துபாய் பிட்ச் எப்படி இருக்கிறது? என்பதே அவர்களுக்கு தெரியாது. ஆகவே ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கே துபாய் மைதானம் சாதகமாக இருக்கும்.
இவை அனைத்தும் ஒரு காரணமாக இருந்தாலும், நான் முன்பே சொன்னபடி ஐசிசி பெரிய தொடர்கள் என்று வந்துவிட்டாலே வீரர்கள் பற்றாக்குறை, பிட்ச் தன்மை, போட்டி அழுத்தம் என எதையும் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியா அணி ஆக்ரோஷமாக விளையாடும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆகவே இந்திய அணி சரியான திட்டத்துடன் வந்தால் கங்காருவை விரட்டியடித்து விட்டு பைனலுக்கு செல்ல முடியும்.
'ரோகித் சர்மா ரொம்ப குண்டாக இருக்கிறார்' பாடி ஷேமிங் செய்த காங்கிரஸ் தலைவரால் சர்ச்சை!