'ரோகித் சர்மா ரொம்ப குண்டாக இருக்கிறார்' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது பாடி ஷேமிங் செய்துள்ளார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ரோகித் சர்மா அதிக உடல் பருமன் கொண்ட கிரிக்கெட் வீரர் என்று காங்கிரஸ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது பாடி ஷேமிங் செய்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி ரோகித் சர்மாவின் தலைமையில் விளையாடும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துகளை கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, ''ரோஹித் சர்மா உல பருமன் கொண்ட விளையாட்டு வீரர். அவர் தனது எடையை குறைக்க வேண்டும். அவர் இந்தியா இதுவரை பெற்ற மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மற்றொரு ட்வீட் போட்ட ஷாமா முகமது கடந்த கால கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிடும்போது சர்மாவின் திறன்களை கேள்வி எழுப்பினார். ''சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி, கபில் தேவ், சாஸ்திரி ஆகியோருடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த வீரரா என்ன? அவர் ஒரு சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தில் இந்திய கேப்டன் ஆன வீரர்'' என்று சாடினார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி! மேட்ச் வின்னர் விலகல்? இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!
தொடர்ந்து மற்றொரு பதிவில், ''மெல்போர்ன் டெஸ்டில் கேஎல் ராகுலை 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்து, ஒப்பனிங்கில் களமிறங்கினார் ரோகித் சர்மா. அது அணிக்கு முற்றிலும் பின்னடைவை ஏற்படுத்தியது. அது ஒரு சுயநல நடவடிக்கை இல்லையா? அதனால்தான் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அகமதாபாத்தில் நடந்த கடைசி உலகக் கோப்பையை நம் இழக்கவில்லையா? நான் ஏன் ரோகித் சர்மாவை முந்தைய கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்'' என்று ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவை பாடி ஷேமிங் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஷாமா முகமதுவை கண்டனம் தெரிவித்த பாஜகவின் ஷெஹ்சாத் பூனவல்லா, ''ராகுல் காந்தியின் தலைமையில் 90 தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் ரோஹித் சர்மாவின் தலைமையை ஈர்க்க முடியாதவர்கள் என்று கூறுகிறார்கள்'' என்று கிண்டலாக கூறினார்.
''டெல்லியில் ஆறு டக் அவுட்கள் மற்றும் 90 தேர்தல் தோல்விகள் காங்கிரஸ் மற்றும் ஷாமா முகமதுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்லார். ஒரு கேப்டனாக ஒரு சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டுள்ளார்'' என்று ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் 2 இந்திய மொழிகளைக் கற்கலாம்: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!
