காமன்வெல்த் நீச்சல் 100மீ பேக்-ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அரையிறுதியில் 7ம் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. நேற்றைய (ஜூலை29) முதல் நாளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.

பாக்ஸிங், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் அபாரமாக விளையாடி ஃபைனலுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க - WI vs IND: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..! ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன்

ஆடவர் 100மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ், 54.68 வினாடிகளில் 100மீ தூரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

இதையும் படிங்க - CWG 2022: நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு தகுதி! பாக்ஸிங்கில் பாக்., வீரரை வீழ்த்தி சிவா தாப்பா வெற்றி

அரையிறுதியில் 100மீ தூரத்தை பேக் ஸ்ட்ரோக்கில் 54.55 வினாடிகளில் கடந்து 7ம் இடம் பிடித்தார். இதன்மூலம் 100மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சல் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றார் ஸ்ரீஹரி நடராஜ். ஜூலை 31ம் தேதி இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.