MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • WI vs IND: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..! ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன்

WI vs IND: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..! ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Jul 30 2022, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

27

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.
 

37

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய், கீமோ பால்.
 

47

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர். சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கும் வெளியேற, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 44 பந்தில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
 

57

ஜடேஜாவும் 16 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக், அதிரடியாக ஆடி சிறப்பாக முடித்து கொடுத்து, தான் தான் இந்திய அணியின் ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது.
 

67

191 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ்(15), ப்ரூக்ஸ்(20), ஜேசன் ஹோல்டர்(0), பூரன்(18), பவல் (14), ஹெட்மயர்(14) என ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

77

முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் காட்டடி அடித்து இந்தியாவின் இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்து 190 ரன்களை எட்ட உதவிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

KV
karthikeyan V
தினேஷ் கார்த்திக்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
Recommended image2
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved