இரண்டாவது குத்துச்சண்டை பட்டத்துக்கான போட்டியில் களமிறங்குகிறார் இந்தியாவின் நீரஜ் கோயட்.
 
முன்னாள் ராணுவ வீரரான நீரஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்றவர். 

மேலும், 2017-ல் ஆசிய - பசிபிக் வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.
 
தொழில்முறை குத்துச்சண்டை வீரரான பின் அவர் இரண்டாவது பட்டத்துக்கான போட்டியில் ஜூன் மாதம் களமிறங்குகிறார். 

இதற்காக கனடாவின் நிறுவனம் ஒன்றுடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

தொழில் ரீதியான குத்துச்சண்டை போட்டியில் 13-ல் மொத்தம் 9-ல் நீரஜ் வென்றுள்ளார்.

கனடாவில் வரும் ஜூன் மாதம் 26-ஆம் தேதி நடக்கவுள்ள குத்துச்சண்டை போட்டியில் நீரஜ்ஜுடன் மோதும் வீரர் குறித்து மே 19-ல் தெரியும் .