India missed the semi-finals Victory for Australia ...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனை பூனம் ரெளத் 106 ஓட்டங்கள், கேப்டன் மிதாலி ராஜ் 69 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையிலும் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது.
ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்து வெற்றிப் பெற்றது.
கேப்டன் லேனிங் 76 ஓட்டங்கள், பெர்ரி 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த் வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது. ஆஸ்திரேலியா அசத்தலாக அரையிறுதிக்கு முன்னேறியது.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
இந்திய அணி சனிக்கிழமை நடைபெறும் தனது கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி 4-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
