india loses 2 wickets earlier

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் இன்று நடந்துவருகிறது. கேப்டன் கோலி ஓய்வில் உள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷிகர் தவனும் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 

மேத்யூசின் பந்துவீச்சில், ரன் ஏதும் எடுக்காமல் ஷிகர் தவன் வெளியேறினார். லக்மலின் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ரோஹித், 2 ரன்னில் லக்மலின் பந்துவீச்சில் வெளியேறினார்.

6 ஓவரின் முடிவில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்து வருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயரும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர்.