India Kashyap HS pranai progress in Canada Open Grand Prix

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய், லக்கானி சரங், அபிஷேக் எலீகர், கரண் ராஜன் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினர்.

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் காஷ்யப் மற்றும் பெருவின் டேனியல் ரெகால் மோதினர்.

இதில் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் டேனியல் ரெகாலை தோற்கடித்தார் காஷ்யப்.

அடுத்த சுற்றில் ஜப்பானின் கோகி வடானேப்பை எதிர்கொள்கிறார் காஷ்யப்.

அதேபோன்று போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரணாய் மற்றும் மெக்ஸிகோவின் ஜாப் கேஸ்டில்லோவுடன் மோதி 21-13, 21-15 என்ற நேர் செட்களில் கேஸ்டில்லோவை வீழ்த்தினார் பிரணாய்.

தனது 2-ஆவது சுற்றில் ஸ்காட்லாந்தின் கீரன் மெரில்லீஸை சந்திக்கிறார் பிரணாய்.

இந்திய வீரர்கள் லக்கானி சரங் 21-9, 17-21, 21-7 என்ற செட் கணக்கில் கனடாவின் யூஜீன் சானை வீழ்த்தினார்,

அபிஷேக் எலீகர் 21-15, 21-5 என்ற நேர் செட்களில் வியத்நாமின் ஹோங் நாம் நுயெனையும் வீழ்த்தினார்.

கரண் ராஜன் 13-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்கையும் வீழ்த்தினார்.

இவர்கள் அனைவரும் 2-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.