india have to do this to take first place in ODI ranking
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்றால் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.
டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே தலா 120 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், 121 புள்ளிகளுடன் தசம இடைவெளியில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி கடந்து விடும் . ஆனால் மொஹாலி (டிச.13,) மற்றும் விசாகப்பட்டனம் (டிச.17) ஆகிய போட்டிகளிலும் இந்திய அணி வென்று 3-0 என்று கைப்பற்றினால் தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் போட்டி தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடிக்கும்.
இலங்கை அணி தற்போது 83 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது. மாறாக இந்திய அணி 2-1 என்று வெற்றி பெற்றால் கூட புள்ளிகள் 119ஆகக் குறையும்.
