india going towards win in third test match

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகித்துவரும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை நோக்கி இந்தியா பயணிக்கிறது.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலியின் இரட்டை சதம் மற்றும் முரளி விஜயின் சதத்தால் 536 ரன்களைக் குவித்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்சை கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 163 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை கோலி டிக்ளேர் செய்தார். 

நான்காவது நாளான இன்று, 410 என்ற இலக்குடன் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இலங்கை வீரர்கள் திணறினர். இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி, 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவை. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இலங்கை அணி, நாளை மீதமிருக்கும் 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்திப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.