சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் கெளர் தங்கம் வென்று அசத்தினார்.

சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் கெளர் தங்கம் வென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகும். இறுதிச்சுற்றில் நவ்ஜோத் 9-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியா இமாயை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதனிடையே, மகளிருக்கான 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் 10-7 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அயாலைம் காஸைமோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

இதனையடுத்து இப்போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இப்போட்டியில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் வெள்ளியும், 59 கிலோ பிரிவில் சங்கீதா வெண்கலமும் வென்றுள்ளனர் கூடுதல் தகவல்.