Asianet News TamilAsianet News Tamil

மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து…

india beaten-by-england-by-three-wickets
Author
First Published Jan 11, 2017, 12:49 PM IST


பயிற்சி ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றிக்  கண்டது இங்கிலாந்து அணி.

இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது.

முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த இந்தியாவி தொடக்க வீரர் மன்தீப் சிங் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். உடன் வந்த ஷிகர் தவன் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து வந்த அம்பட்டி ராயுடு, அபாரமாக ஆடி 97 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 100 ஓட்டங்களில் ரிட்டையர்டு ஆனார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங், 48 பந்துகளுக்கு 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்து 56 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் தோனி, அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் டக் அவுட்டாக 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.

40 பந்துகளை சந்தித்த தோனி, 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68, ஹர்திக் பாண்டியா 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி, ஜேக் பால் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 62, உடன் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 40 ஓட்டங்கள் எடுத்தனர். அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 85 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் எடுத்தார்.

இயான் மோர்கன் 3 ஓட்டங்கள் எடுக்க, ஜோஸ் பட்லர் 46, லியாம் டாசன் 41 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர். மொயீன் அலி டக் அவுட் ஆனார்.

இவ்வாறாக அனைத்து வீரர்கள் ஒத்துழைப்பில் 48.5 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்து வென்றது இங்கிலாந்து.

கிறிஸ் வோக்ஸ் 11, ஆதில் ரஷீத் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios