இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்திய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டார்.
தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்தரி 2 கோல் அடித்தார். இதன் மூலமாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!
தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள், கோல் அடிக்க விடாமல் தடுத்த போதிலும், இந்திய வீரர் சேத்தரி 2 கோல் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய வீரர் ப்ரீதம் கோட்டலுக்கு நடுவர் ஃபவுல் கொடுத்து, பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பாலை த்ரோ செய்ய அழைத்ததால், இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அவரை தடுத்தார். இதன் காரணமாக பாக் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நடுவர் இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை உடனடியாக வெளியேற்றினார். எனினும், பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எச்சரிக்கை (மஞ்சள் அட்டை) மட்டுமே வழங்கப்பட்டது.
எனினும், சுனில் சேத்தரி அடுத்தடுத்து கோல் அடிக்கவே இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.