india all out for 112

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 112 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.

தர்மசாலாவில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவனும் கேப்டன் ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி, இலங்கை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணிக்கு தோனி-குல்தீப் யாதவ் ஜோடி சற்று ஆறுதல் அளித்தது. குல்தீப் யாதவும் ஸ்டம்பிங்கில் வெளியேற, மறுமுனையில் சுதாரிப்பாக தோனி, அரைசதம் கடந்தார்.

இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை துளிர்விட, தோனியுடன் ஆடிக்கொண்டிருந்த பும்ரா அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தோனியும் அவுட்டானார்.

38.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி, 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.