உலக செஸ் போட்டியில் இந்தியாவின் . துரோணவல்லி ஹரிகாவும், வங்கதேசத்தின் ஷமிமா அக்தர் லிஸாவின் ஆட்டத்தை டிரா செய்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் உலக செஸ் போட்டியில் இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா தனது முதல் சுற்றில் வங்கதேசத்தின் ஷமிமா அக்தர் லிஸாவுடன் டிரா செய்தார்.

விருவிருப்பாக போன இந்த ஆட்டத்தை கடைசி நொடியில் வங்கதேசம் வெல்வது போல இருந்தது. அதனை தனது நுணுக்கமான ஆட்டத்தால் சமன் செட்தார் துரோணவல்லி ஹரிகா.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் பத்மினி, ஆர்மேனியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான எலினா டேனிலியனுடன் டிரா செய்தார்.