- Home
- Sports
- Sports Cricket
- பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!
பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!
வெறும் 60 பந்துகளில் சதம் விளாசிய ரோகித் சர்மா 94 பந்துகளில் 18 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 155 ரன்கள் அடித்து நொறுக்கினார். விராட் கோலியும் அதிரடி சதம் விளாசினார்.

ரோகித் சர்மா, விராட் கோலி சதம்
விஜய் ஹசாரே டிராபியில் இந்திய அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளனர். சிக்கிமுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சதம் அடித்தார். வெறும் 60 பந்துகளில் சதம் விளாசிய ரோகித் சர்மா 94 பந்துகளில் 18 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 155 ரன்கள் அடித்து நொறுக்கினார்.
155 ரன்கள் விளாசிய ரோகித்
ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 236 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய மும்பை அணி 30.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 155 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
விராட் கோலியும் அதிரடி சதம்
இதேபோல் டெல்லி அணிக்காக ஆடிய விராட் கோலி ஆந்திராவுக்கு எதிராக சூப்பர் சதம் அடித்து அசத்தினார். விராட் கோலி இப்போது வரை 94 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 298 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய டெல்லி அணி 30 ஓவர்களில் 245 ரன்களை எட்டி வெற்றியை நெருங்கியுள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் விளாசியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷி
விஜய் விஜய் ஹசாரே டிராபியில் இன்றைய நாள் முழுவதும் சதங்கள் குவித்த நாளாக அமைந்துள்ளது. பீகார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் எடுத்து பிரம்மிக்க வைத்தார். ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் கர்நாடகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார்.

