Asianet News TamilAsianet News Tamil

தம்பிங்களா மண்டை பத்திரம்.. இந்திய வீரர்களை மிரட்டும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 
 

ian chappell warning indian batsmen ahead of australia test series
Author
Australia, First Published Nov 27, 2018, 4:45 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் அந்த அணியும் தொடர் தோல்வியை தழுவிவருவதால், இந்திய அணியை வீழ்த்தி மீண்டெழும் முனைப்பில் உள்ளது. 

எனினும் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்புதான். அதேநேரத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் சிறப்பாக உள்ளது. எனவே இந்திய அணிதான் தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறி இந்திய அணியை எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சேப்பல், இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஒரேயொரு பயிற்சியாட்டத்தில் தான் ஆட உள்ளது. எனவே சிட்னியில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கவனமாக ஆட வேண்டும். எதிரணியினர் வெற்றிக்காக மட்டுமே ஆடுவார்கள் என்பதை இந்திய அணி மனதில் கொள்ள வேண்டும். ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் பவுன்ஸுக்கு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்த பவுன்ஸ் ஆடுகளங்களிலிருந்த் வருபவர்கள், பந்துகள் கூர்மையாக எழும்பும்போது திணறுவர். இதுதான் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்வதில் உள்ள சவால். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் கள நடத்தையில் மாற்றங்கள் இருக்கலாம். எனினும் பவுன்ஸர்கள் போட்டு இந்திய பேட்ஸ்மேன்களை குறிவைப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதனால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி குறைத்து மதிப்பிட்டால் அவ்வளவுதான் என்று மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். 

மேலும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் என டாப் கிளாஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதால், பவுலர்கள் கூடுதல் பொறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் பந்துவீசி இந்திய வீரர்களை கட்டுப்படுத்த முயல்வர் என்பதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்று இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios