Hundreth match shigar dawan got 100 runs
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது 100வது ஆட்டத்தில் 100 ரன்கள் விளாசித் தள்ளி அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக வரலாறு படைத்தது.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் 5 ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரரான தவான் தனது நூறாவது போட்டியான இன்று 109 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 34.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்த போது, பலமான இடி இடிக்க துவங்கியது.

ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. இருப்பினும் களத்தில் இருந்த அம்பயர்கள் வீரர்களின் பாதுகாப்பு கருதி வெளியேறும் படி தெரிவித்தனர். இதையடுத்து மோசமான வானிலை காரணமாக போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பின் சிறிது நேர தாமதத்துக்கு பின் மீண்டும் துவங்கிய போட்டியில் ரகானே ரன்களுக்கு அவட் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களும் , பாண்டியா 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர்.
கடைசி நேரத்தில் தோனி 42 ரன்கள் எடுத்து ஓரளவு கைகொடுத்தார்.இறுதியில் இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. தற்போது தென் ஆப்ரிக்க அணி 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது,
