Hockey World Cup: ஃபைனலில் பெல்ஜியத்தை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது ஜெர்மனி
ஹாக்கி உலக கோப்பை ஃபைனலில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி உலக கோப்பையை வென்றது.

ஹாக்கி உலக கோப்பை இந்தியாவில் நடந்தது. ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி அணியும், நெதர்லாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
ஃபைனலில் பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. இரு அணிகளும் கோலுக்காக கடுமையாக போராடி கோல்களை அடித்தன. ஆட்ட முடிவில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய 2 அணிகளும் தலா 3 கோல்கள் அடிக்க, ஆட்டம் டிராவானது.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை
பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி 5 கோல்களும், பெல்ஜியம் 4 கோல்களும் அடிக்க, ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது.