தாகூருக்கு ஒரு நியாயம், கருண் நாயருக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

தாகூருக்கு ஒரு நியாயம், கருண் நாயருக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் வேண்டுமென்றே ஓரங்கட்டப்படுகிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது. கருண் நாயர், மயன்க் அகர்வால் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, இந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதால், ஷர்துல் தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருக்குமே முதல் டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தாகூர் களமிறக்கப்பட்டார். 

ஆனால் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், காயத்தால் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், தாகூர் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, இந்தியா ஏ அணியில் சிராஜ் சிறப்பாக பந்துவீசிய போதிலும் தாகூருத்தான் அணியில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிராஜிற்கு முன்னதாகவே இந்திய அணிக்கு தாகூர் தேர்வானவர் என்பதால் இந்த நடவடிக்கை சரிதான். ஆனால் இதே நடைமுறை கருண் நாயர் விஷயத்தில் பின்பற்றப்படாதது ஏன்? என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த கருண் நாயர் ஒரு போட்டியில் கூட ஆடவைக்கப்படவில்லை. அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாத நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்டார். சிராஜிற்கு பதில் தாகூர் சேர்க்கப்பட்டது சரி என்றால், கருண் நாயருக்கு அல்லவா வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்? என்பதே ஹர்ஷா போக்ளோவின் கருத்து. 

கருண் நாயரை போலவே மயன்க் அகர்வாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.