ஜெர்மனி அணியிடம் ஷூட் அவுட்டில் இந்தியா தோல்வி – கட்டாய வெற்றியை நோக்கி ஜப்பானுடன் பலப்பரீட்சை!

ராஞ்சியில் நேற்று நடந்த FIH மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

Germany Beat India in Penalty Shoot out by 4-3 in FIH Womens Olympic Qualifiers and must win against Japan in Today Match to qualify for Paris 2024 Olympics rsk

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில், இந்திய மகளிர் அணி இடம் பெற்று விளையாடி வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. இந்தப் போட்டியை நேரில் பார்ப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வருகை தந்திருந்தார்.

 

 

பேட்டிங்கில் கோல்டன் டக் – பீல்டிங்கில் கலக்கிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

இந்திய மகளிர் அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்பட்ட இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் ஜெர்மன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கு ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் அணி இருந்த நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான பொட்டியிலான போட்டி நடக்க இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது. 

டிராவில் முடிந்த முதல் சூப்பர் ஓவர் – 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

முதல் கால் இறுதி முடிவில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது. 2ஆவது காலிறுதி முடிவில் ஜெர்மனி அணியில் உதிதா துஹான் கோல் அடிக்கவே, அந்த அணி 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து மூன்றாவது கால் இறுதி முடிவில் இந்திய அணியை விட பல மடங்கு ஆக்ரோஷமாக ஜெர்மனி விளையாடியது. எனினும், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 4ஆவது கால் இறுதியில் ஜெர்மனிக்கு கிடைத்த பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை இந்திய அணி சரியாக தடுத்தது. மேலும், 4ஆவது காலிறுதியின் 57ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை சார்லோட் ஸ்டேபன்ஹார்ஸ்ட் ஒரு கோல் அடிக்கவே ஜெர்மனி 2-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை இஷிகா ஒரு கோல் அடித்து 2-2 என்று சமன் செய்தார்.

த்ரில்லிங்கான கடைசி பந்து – டிராவில் முடிந்த 3ஆவது டி20 போட்டி – சூப்பர் ஓவர்!

போட்டியின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்று சமனில் இருந்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில், முதல் முயற்சியிலேயே சவீதா புனியா கோல் அடிக்க இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகித்தது. அடுத்து சங்கீதாவும் கோல் அடிக்க இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு மூன்று முயற்சிகளுக்கு பிறகு ஜெர்மனி கோல் அடித்தது. தொடர்ந்து மற்றொரு கோலும் அடிக்க 2-2 என்று சமன் செய்தது. கடைசியாக இரு அணிகளும் 3-3 என்று இருந்த நிலையில், முடிவில் ஜெர்மனி கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios