பேட்டிங்கில் கோல்டன் டக் – பீல்டிங்கில் கலக்கிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் கோல்டன் டக் ஆன நிலையில் பீல்டிங்கில் இருவரும் ஒரு ரன் அவுட் செய்துள்ளனர்.

Virat Kohli Super Fielding and Also take Gulbadin naib run out in super over against Afghanistan in 3rd and Final T20 Match rk

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிநேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோல்டன் டக் முறையில் அவுட்டானார்.

டிராவில் முடிந்த முதல் சூப்பர் ஓவர் – 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரது காம்பினேஷனில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர், கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். குர்பாஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜத்ரன் 50 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

த்ரில்லிங்கான கடைசி பந்து – டிராவில் முடிந்த 3ஆவது டி20 போட்டி – சூப்பர் ஓவர்!

வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தானது லெக் ஸைடு திசையில் வைடாக சென்ற நிலையில் அதனை பிடித்து சஞ்சு சாம்சன் ஸ்டெம்பிங் செய்தார். டிவி ரீப்ளேயில் சரியான முறையில் ஸ்டெம்பிங் செய்தது தெரியவர அவுட் என்று காட்டப்பட்டது. இது ரோகித் சர்மாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று போட்டியின் 16.3ஆவது பந்தை கரீம் ஜனத் எதிர்கொண்டார். அவர் டீப் மிட் விக்கெட் திசையில் பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். டீம் மிட் விக்கெட் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி டைவ் அடித்து ஒரு கையால் பந்தை பிடித்த நிலையில் மைதானத்திற்குள் தூக்கி எறிந்து கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

IND vs AFG 3rd T20I: டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில், முதல் பந்திலேயே குல்பதீன் நைப்பை ரன் அவுட் முறையில் கோலி மற்றும் சாம்சன் இருவரும் இணைந்து ஆட்டமிழக்கச் செய்தனர். முதல் சூப்பர் ஓவர் டிரா ஆன நிலையில், 2ஆவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios