இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, ஆலம் என்ற பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது.

தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் கங்குலி, மிட்னாபூரில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண சிறப்பு விருந்தினராக கங்குலி அழைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அந்தப் போட்டியைக் காண கங்குலி வந்தால், அவர் கொலை செய்யப்படுவார் என கங்குலியின் தாயார் நிருபாவிற்கு கடந்த 5-ஆம் தேதி கொலை மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது.

ஆலம் என்ற பெயரில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த தகவலை தற்போது உறுதிச் செய்துள்ள கங்குலி, இதுதொடர்பாக மிட்னாபூர் மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி புகார் தெரிவித்தார்.

இதனிடையே, செய்தியாளரிடம் பேசிய கங்குலி, திட்டமிட்டபடி போட்டிகளைக் காண மிட்னாபூர் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார்.