இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, லோதா குழு பரிந்துரைத்த குழுவின் அறிவுறுத்தலின்படி பிசிசிஐ இயங்கிவருகிறது. இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பிசிசிஐ-யின் தலைவராவதற்கு லோதா குழு பரிந்துரைத்த தகுதிகளை கங்குலி பெற்றுள்ளதால், அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி, இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். 

கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.