Asianet News TamilAsianet News Tamil

காமன்வெல்த் 2022 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்..! முழு பட்டியல் இதோ

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் முழு பட்டியலை பார்ப்போம்.
 

full list of indian athletes qualified for commonwealth games 2022 at birmingham
Author
Chennai, First Published Jul 21, 2022, 2:57 PM IST

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

2010ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து 200 வீரர்களுக்கு மேல் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர்.

இந்த ஆண்டு (ஜூலை 28 - ஆகஸ்ட் 8 ) பிர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவுள்ள இந்திய வீரர்களின் முழு பட்டியலை பார்ப்போம். எந்தெந்த விளையாட்டு போட்டிகளில் எந்தெந்த வீரர்கள், எந்தெந்த பிரிவுகளில் ஆடுகின்றனர் என்ற முழு பட்டியலை பார்ப்போம்.

இதையும் படிங்க - காமன்வெல்த்தில் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்! 1.2 மில்லியன் டிக்கெட் விற்பனை

தடகளம்:

தடகளத்தில் நீரஜ் சோப்ரா, டுட்டீ சந்த், ஹிமா தாஸ் உட்பட 35 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

1. நிதேந்தர் ராவத் - ஆடவர் மாரத்தான்
2. எம் ஸ்ரீசங்கர் - ஆடவர் நீளம் தாண்டுதல்
3. முகமது அனீஸ் யாஹியா - ஆடவர் நீளம் தாண்டுதல்
4. அவினாஷ் சேபிள் - ஆடவர் 3000மீ ஸ்டீபிள்சேஸ்
5. அப்துல்லா அபுபக்கர் - ஆடவர் டிரிபிள் ஜம்ப்
6. பிரவீன் சித்ரவேல் - ஆடவர் டிரிபிள் ஜம்ப்
7. எல்தோஸ் பால் - ஆடவர் டிரிபிள் ஜம்ப்
8. நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல்
9. டிபி மானு - ஈட்டி எறிதல்
10. ரோஹித் யாதவ் - ஈட்டி எறிதல்
11. சந்தீப் குமார் - ஆடவர் 10கிமீ ரேஸ் வாக்
12. அமித் காத்ரி - ஆடவர் 10கிமீ ரேஸ் வாக்
13. அமோஜ் ஜேகப் - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
14. நோவா நிர்மல் டாம் - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
15. ஆரோக்கிய ராஜீவ் - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
16. முகமது அஜ்மல் - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
17. நாகநாதன் பாண்டி - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
18. ராஜேஷ் ரமேஷ் - ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டம்
19. ஜோதி யாராஜி  - மகளிர் 100மீ தடை ஓட்டம்
20. ஆன்சி சோஜன் - மகளிர் நீளம் தாண்டுதல்
21. மன்ப்ரீத் கௌர் - மகளிர் ஷாட் புட்
22. நவ்ஜீத் கௌர் தில்லான் - மகளிர் வட்டு எறிதல்
23. சீமா புனியா - மகளிர் வட்டு எறிதல்
24. அன்னு ரானி - மகளிர் ஈட்டி எறிதல்
25. ஷில்பா ராணி - மகளிர் ஈட்டி எறிதல்
26. மஞ்சு பாலா சிங் - மகளிர் ஹேமர் த்ரோ (Hammer throw)
27. சரிதா ரோமித் சிங் - மகளிர் ஹேமர் த்ரோ
28. பாவ்னா ஜட் - மகளிர் 10கிமீ ரேஸ் வாக்
29. பிரியங்கா கோஸ்வாமி - மகளிர் 10கிமீ ரேஸ் வாக்
30. ஹிமா தாஸ் - மகளிர் 4*100மீ தொடர் ஓட்டம்
31. டுட்டீ சந்த் - மகளிர் 4*100மீ தொடர் ஓட்டம்
32. ஸ்ரபானி நந்தா - மகளிர் 4*100மீ தொடர் ஓட்டம் 
33.  எம்வி ஜில்னா - மகளிர் 4*100மீ தொடர் ஓட்டம் 
34. என்.எஸ்.சிமி - மகளிர் 4*100மீ தொடர் ஓட்டம் 

பேட்மிண்டன்:

1. பி.வி.சிந்து (மகளிர்)
2. ஆகார்ஷி காஷ்யப் (மகளிர்)
3. ட்ரீசா ஜாலி (மகளிர்)
4. காயத்ரி கோபிசந்த் (மகளிர்)
5. அஷ்வினி போனப்பா (மகளிர்)
6. லக்‌ஷ்யா சென் (ஆடவர்)
7. கிடாம்பி ஸ்ரீகாந்த் (ஆடவர்)
8. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி (ஆடவர்)
9. சிராஜ் ஷெட்டி (ஆடவர்)
10. பி. சுமீத் ரெட்டி (ஆடவர்)

பாக்ஸிங்:

1. அமித் பங்கால் - ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவு
2. முகமது ஹுசாமுதின் - ஆடவர் 57 கிலோ
3. ஷிவா தாபா - ஆடவர் 63.5 கிலோ
4. ரோஹித் டோகாஸ் - ஆடவர் 67 கிலோ
5. சுமித் குண்டு - ஆடவர் 75 கிலோ
6. ஆஷிஷ் சௌத்ரி - ஆடவர் 80 கிலோ
7. சஞ்ஜீத் - ஆடவர் 92 கிலோ
8. சாகர் - ஆடவர் 92+ கிலோ
9. நீது - மகளிர் 48 கிலோ
10. நிகாத் ஜாரீன் - மகளிர் 50 கிலோ
11. ஜாஸ்மின் - மகளிர் 60 கிலோ
12. லவ்லினா பார்கொஹைன் - மகளிர் 70 கிலோ

கிரிக்கெட்:

1998ம் ஆண்டுக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆடப்படவுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பார்படாஸ் மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கலந்துகொண்டு ஆடுகிறது.

சைக்கிளிங்:

1. டேவிட் பெக்காம்
2. எசௌ அல்பான்
3. சுஷிகலா அகாஷே

இதையும் படிங்க - Commonwealth Games 2022:ஊக்கமருந்து பயன்படுத்தியதால் இந்திய தடகள வீராங்கனைகள் தனலக்‌ஷ்மி,ஐஸ்வர்யா பாபு நீக்கம்

ஹாக்கி:

1. இந்திய ஆடவர் ஹாக்கி அணி
2. இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஜூடோ:

1. விஜய் குமார் யாதவ் - ஆடவர் 60 கிலோ
2. ஜஸ்லீன் சிங் சைனி - ஆடவர்  66 கிலோ
3. தீபக் டெஸ்வால் - ஆடவர் 100 கிலோ
4. எல் ஷுஷிலா தேவி - மகளிர் 48 கிலோ
5. சுஜிகா தரியல் - மகளிர் 57 கிலோ
6. துலிகா மான் - மகளிர் 78+ கிலோ

ஸ்குவாஷ்:

1. சௌரவ் கோசல் - ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர்
2. ராமித் டண்டான் - ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர்
3. அபய் சிங் - ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் 
4. ஜோஷ்னா சின்னப்பா - மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர்
5. சுனைனா குருவில்லா - மகளிர் ஒற்றையர்
6. அனஹாத் சிங் - மகளிர் ஒற்றையர்
7. தீபிகா பல்லிகல் - மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர்
8. ஹரிந்தர் பால் சிங் சந்து - ஆடவர் இரட்டையர்
9. வேலவன் செந்தில்குமார் - ஆடவர் இரட்டையர்

நீச்சல்: 

1. சஜன் பிரகாஷ் - ஆடவர் 50மீ, 100மீ மற்றும் 200மீ பட்டர்ஃப்ளை
2. ஸ்ரீஹரி நடராஜ் - ஆடவர் 50மீ, 100மீ, 200மீ பேக்ஸ்ட்ரோக்
3. குஷக்ரா ராவத் - ஆடவர் 200மீ, 400மீ, 1500மீ ஃப்ரீஸ்டைல்
4. அத்வைத் பேஜ் - ஆடவர் 1500மீ ஃப்ரீஸ்டைல்

டேபிள் டென்னிஸ்:

1. ஷரத் கமல் (ஆடவர்)
2. சத்தியன் ஞானசேகரன் (ஆடவர்)
3. சனில் ஷெட்டி (ஆடவர்)
4. ஹர்மீத் தேசாய் (ஆடவர்)
5. மனிகா பத்ரா (மகளிர்)
6. தியா சிட்டாலே (மகளிர்)
7. ஸ்ரீஜா அகுலா (மகளிர்)
8. ரீத் ரிஷ்யா (மகளிர்)

ரிசர்வ் வீரர்கள் -  மானுஷ் ஷா மற்றும் ஸ்வஸ்திகா கோஷ் 

டிரயத்லான்:

1. சஞ்சனா ஜோஷி - மகளிர்
2. பிரஞ்யா மோஹன் - மகளிர்

பளுதூக்குதல்:

1. மீராபாய் சானு - மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு
2. பிந்தியாராணி தேவி - மகளிர் 55 கிலோ
3. பாபி ஹஸாரிகா - மகளிர் 59 கிலோ
4. உஷா குமாரா - மகளிர் 87 கிலோ
5. பூர்ணிமா பாண்டே - மகளிர் 87+ கிலோ
6. சங்கேத் மஹாதேவ் - ஆடவர் 55 கிலோ
7. சனம்பம் ரிஷிகாந்தா சிங் - ஆடவர் 55 கிலோ
8. ஜெரெமி லால்ரினுங்கா - ஆடவர் 67 கிலோ
9. அச்சிந்தா ஷேவுலி - ஆடவர் 73 கிலோ
10. அஜய் சிங் - ஆடவர் 81 கிலோ
11. விகாஸ் தாகூர் - ஆடவர் 96 கிலோ
12. ரகலா வெங்கட் ராகுல் - ஆடவர் 96 கிலோ

மல்யுத்தம்:

1. பூஜா கெலாட் - மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு
2. வினேஷ் போகட் - மகளிர் 52 கிலோ
3. அன்ஷு மாலிக் - மகளிர் 57 கிலோ
4. சாக்‌ஷி மாலிக் - மகளிர் 62 கிலோ
5. திவ்யா காக்ரான் - மகளிர் 68 கிலோ
6. பூஜா சிஹாக் - மகளிர் 76 கிலோ
7. ரவி குமார் தாஹியா - ஆடவர் 57 கிலோ
8. பஜ்ரங் புனியா - ஆடவர் 65 கிலோ
9. நவீன் - ஆடவர் 74 கிலோ
10. தீபக் புனியா - ஆடவர் 86 கிலோ
11. தீபக் - ஆடவர் 97 கிலோ
12. மோஹித் க்ரெவால்  - 125 கிலோ

Follow Us:
Download App:
  • android
  • ios