Four countries participating hockey competition Last year the missed opportunity was taken by Srijesh ...
நான்கு நாடுகள் பங்கேற்கும் வலைகோல் பந்தாட்டப் போட்டிக்கான இந்திய அணியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இணைந்துள்ளார்.
நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி வரும் 17-ஆம் தேதி நியூஸிலாந்தில் தொடங்குகிறது.
கடந்தாண்டில் முழங்கால் காயம் காரணமாக முக்கிய போட்டிகளின் வாய்ப்பை இழந்த ஸ்ரீஜேஷ், இப்போட்டியின் மூலம் 2018-ஆம் ஆண்டை தொடங்குகிறார்.
நடுகள வீரர் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த அணிக்கு, சிங்லென்சனா சிங் துணை கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் புதிதாக தில்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் இணைந்துள்ளனர். சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் அவர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தை காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் ஆட்டமாகக் கொண்டுள்ளோம்' என்றார்.
இந்திய அணி விவரம்:
கோல் கீப்பர்கள்:
ஸ்ரீஜேஷ், கிருஷன் பஹதூர் பாதக்.
முன்கள வீரர்கள்:
தில்பிரீத் சிங், ரமன்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அர்மான் குரேஷி.
நடுகள வீரர்கள்:
மன்பிரீத் சிங்(கேப்டன்), சிங்லென்சனா சிங், விவேக் சாகர் பிரசாத், ஹர்ஜீத் சிங், நீலகண்ட சர்மா, சிம்ரன்ஜித் சிங், சத்பீர் சிங்.
தடுப்பாட்டக்காரர்கள்:
ஹர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், குரிந்தர் சிங், வருண் குமார், ரூபிந்தர்பால் சிங், வீரேந்திர லக்ரா.
