ஜந்தர் மந்தர் போராட்டம்: மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா களமிறங்கியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியும் கூட. அவரை அந்த பதவியிலிருந்து நீக்கக்கோரியும், நடப்பு மல்யுத்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் பாப் டூப்ளெசிஸ்: வாய்ப்பை பயன்படுத்தி வானவேடிக்கை காட்டுமா கொல்கத்தா?
அந்த கமிட்டி விசாரண மேற்கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வரும் வரையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பிலிருந்து 4 வாரங்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக டெல்லி ஜந்தர் மந்திரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் என்ற பஜ்ரங் புனியா,விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அந்த கட்சி, இந்த கட்சி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி கலந்து கொள்ளலாம் என்று பஜ்ரங் புனியா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உடற்பயிற்சி மேற்கொண்டனர். உடற்பயிற்சி செய்து கொண்டு தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அபினவ் பிந்த்ரா களமிறங்கியுள்ளார்.
IPL 2023: இத்தனை சாதனைகளை ஆர்சிபி படைத்தும் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருப்பது ஏன்?
ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விளையாட்டு வீரர்களான நாங்கள், சர்வதேச அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒவ்வொரு நாளும் கடுமையாகப் பயிற்சி செய்கிறோம். இந்திய மல்யுத்த நிர்வாகத்தின் மீதான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நமது விளையாட்டு வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது அவசியமாக இருப்பதைக் கண்டு மிகவும் கவலையாக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது.
விளையாட்டு வீரர்களின் கவலைகள் கேட்கப்பட்டு நியாயமாகவும் சுதந்திரமாகவும் இந்த பிரச்சினை சரியாக கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். துன்புறுத்தலைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும் கூடிய முறையான பாதுகாப்புப் பொறிமுறையின் முக்கியத் தேவையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களும் செழிக்க பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2008 ஒலிம்பிக் போட்டிகளில், 10மீ துப்பாக்கி சுடுவதில் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தான் இந்த அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.