Does India crash into the opening match of the Intercontinental Football Tournament?
இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, சீன தைபே அணியுடன் மோதுகின்றது.
இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி மும்பையில் நடக்கவுள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கால்பந்து போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்தும் வகையில் இந்த இன்டர்காண்டினென்டல் கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது.
வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் இந்தியா, சீன தைபே, கென்யா, நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
1-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதுகின்றன.
2-ஆம் தேதி கென்யா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
4-ஆம் தேதி இந்தியா - கென்யா அணிகள் மோதுகின்றன.
5-ஆம் தேதி சீன தைபே - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
7-ஆம் தேதி இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
8-ஆம் தேதி சீன தைபே - கென்யா அணிகள் மோதுகின்றன.
10-ஆம் தேதி இறுதி ஆட்டம்.
