Diamond League 2023: டைமண்ட் லீக் தடகள போட்டி! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா..!
இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்றது. இதில், வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகின்றன. இந்த டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று அசத்தினார். அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க;- முதலைமைச்சர் கோப்பை அறிமுகம்: நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இந்நிலையில், இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்றது. இதில், வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்து வந்தது.
இதையும் படிங்க;- ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?
இந்நிலையில், நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் வென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 2வது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 3வது இடமும் பிடித்தார். இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.