dhuraimurugan got autograph from csk skipper dhoni
சென்னை அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, தோனியின் ஆட்டோகிராஃப் போடப்பட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக பெற்றார்.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் கோப்பையை வென்று அசத்தியது.
கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அணி நிர்வாகத்தினர், நிர்வாகத்தினருக்கு நெருங்கியவர்கள் ஆகியவர்களுடன் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
அந்த விருந்தில் கலந்துகொண்ட திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தோனியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தோனி ஆட்டோகிராஃப் போட்டு சென்னை அணியின் டி-ஷர்ட்டை துரைமுருகனுக்கு பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட துரைமுருகன், தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
