முதுகுவலியால் அவதிப்படும் தோனி அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு சென்னை வீரர் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிவருகிறார். மும்பைக்கு எதிரான போட்டியின்போது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் வெளியேறினார்.

அதன்பிறகு கொல்கத்தா அணியுடனான போட்டியின்போது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ரெய்னா ஆடவில்லை.

ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டுவரும் டுபிளெசிஸ், இதுவரை எந்த போட்டியிலும் ஆடவில்லை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி, அவரது தந்தை மரணித்துவிட்டதால், தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார்.

இப்படியாக ஒவ்வொரு வீரராக விலகிவரும் நிலையில், முதுகுவலி காரணமாக அடுத்த போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டியின்போது முதுகுவலியால் தோனி அவதிப்பட்டார். பேட்டிங்கின் இடையே மருத்துவர் வந்து சிகிச்சை அளித்துவிட்டு சென்றார்.

ஆனாலும் முதுகுவலியுடன் தொடர்ந்து விளையாடிய தோனி, வெற்றிக்காக போராடினார். இந்நிலையில், முதுகுவலி காரணமாக அடுத்த ஒரு போட்டியில் தோனி விளாயாட மாட்டார் என கூறப்படுகிறது. சிறிது ஓய்விற்கு பிறகு அதற்கடுத்த போட்டியில் தோனி களமிறங்குவார் எனவும் கூறப்படுகிறது. தோனி விலகினால், அடுத்த போட்டியில் ஷேன் வாட்சன் கேப்டன் பொறுப்பை வகிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.