Asianet News TamilAsianet News Tamil

தோனியா இப்படி செய்தார்னு கேக்குற அளவுக்கு அவர் செய்த காரியம்!! ரசிகர்கள் அதிர்ச்சி

dhoni missed run out chance in first qualifier match against srh
dhoni missed run out chance in first qualifier match against srh
Author
First Published May 23, 2018, 3:15 PM IST


பெரும்பாலும் விக்கெட் கீப்பிங்கில் தவறு செய்யாத தோனி, ஹைதராபாத்துக்கு எதிரான முதல் தகுதி சுற்று போட்டியில், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

7வது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி, அதிகமுறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்றது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின்போது ரன் அவுட் வாய்ப்பை தோனி தவறவிட்டார். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் தோனியும் ஒருவர். கில்கிறிஸ்ட், சங்ககரா வரிசையில் தோனியும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு சாதனைகளை தன்னகத்தே வைத்திருக்கும் தோனி, டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் டி20 போட்டிகளில் அதிகமான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பரும் தோனி தான்.

விக்கெட் கீப்பிங்கில் பொதுவாக செம ஷார்ப்பாக இருக்கும் தோனி, நேற்றைய போட்டியில், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார். ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின்போது, மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தை வில்லியம்சன் அடித்து விட்டு மூன்று ரன்கள் ஓடினார். வில்லியம்சன் அடித்த பந்தை ஹர்பஜன் சிங் பிடித்தார். இரண்டு ரன்களை நிறைவு செய்யும்போதே ஹர்பஜன் சிங் பந்தை பிடித்துவிட்டார். அதற்குள் வில்லியம்சனும் கோஸ்வாமியும் மூன்றாவது ரன் ஓட, ஹர்பஜன் பந்தை தோனியிடம் வீசினார். அந்த பந்தை பிடித்த தோனி கையால் ஸ்டம்பை அடித்திருந்தாலே ரன் அவுட் ஆகியிருக்கும். அந்தளவிற்கு டைமிங் இருந்தது. ஆனால், அவசரத்தில் வேகமாக தூக்கி வீச, பந்து ஸ்டம்பில் படவில்லை. 

ரன் அவுட்களின் போது டைமிங்கை சரியாக கணிக்கும் தோனி, நேற்று அவசரப்பட்டு தவறவிட்டார். தோனி ரன் அவுட்டை தவறவிட்ட நிகழ்வு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios