ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த முறை, சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

மீண்டும் சென்னை மைதானத்தில் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்க உள்ளதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இதற்கிடையே சென்னை அணி வீரர்கள் சென்னை வந்துவிட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சிக்கு இடையே விளம்பரங்களிலும் நடிப்பது, சென்னையை சுற்றிப்பார்ப்பது என மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் காலா பட வசனத்தை தோனி டப்ஸ்மேஸ் செய்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில், கியாரே செட்டிங்கா..? வேங்கையன் மவன் ஒத்தைல நிக்கேன்.. தில்லிருந்தா மொத்தமா வாங்கலே.. என நெல்லை தமிழில் ரஜினி பேசிய வசனம், மிகவும் பிரபலமானது.

ரஜினி பேசியிருந்த அந்த வசனத்தை வைத்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் தெறிக்கவிடப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனியும் காலா பட வசனத்தை டப்ஸ்மேஸ் செய்துள்ளார். அந்த வசனம் பேசும்போது, ரஜினி கறுப்பு கண்ணாடி அணிந்திருப்பார். அதேபோன்று கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு, டப்ஸ்மேஸ் செய்துள்ளார் தோனி.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Kya Re? Setting ah?? 🦁 💛#Kaala Teaser ft. @msdhoni & @ChennaiIPL Players ▶️ https://t.co/nt0ogIjR0v #KaalaTeaser pic.twitter.com/vRB37btv9s
— Wunderbar Films (@wunderbarfilms) March 29, 2018