Paris Olympics 2024, Archery: காலிறுதியில் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி அதிர்ச்சி தோல்வி!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணியானது காலிறுதிப் போட்டியில் 2-6 என்ற கணக்கில் துருக்கியிடம் தோல்வி அடைந்தது.

Dhiraj Bommadevara, Tarundeep Rai, Pravin Ramesh Jadhav are the 3 member Indian men's team is exit from Paris Olympics 2024 after a 2-6 loss against Turkey in Archery Event rsk

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது கடந்த 26ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், 3ஆவது நாளான ஜூலை 29ஆம் தேதியான இன்று ஆண்களுக்கான வில்வித்தை காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கொண்ட இந்திய ஆண்கள் அணியானது துருக்கி அணியை எதிர்கொண்டது.

Paris Olympics 2024: இது எனக்கான நாள் இல்லை – 4ஆவது இடம் பிடித்து வெளியேறிய அர்ஜூன் பாபுதா!

இதில் முதல் 2 செட்டுகளை 53-57, 52-55 என்று துருக்கி கைப்பற்றியது. இதையடுத்து 3ஆவது செட்டை இந்திய அணி 55-54 என்று கைப்பற்றியது. கடைசியாக கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றி தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த செட்டை இந்திய அணி 54-55 என்று இழந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து காலிறுதி சுற்றுடன் வெளியேறியது.

Olympics 2024:10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோல்வி – வெண்கலப் பதக்கத்தை இழந்த அர்ஜூன் பாபுதா

இதன் மூலமாக இந்திய அணியானது 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஒரு அணியாக தோற்றாலும் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் மற்றும் பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் தனிநபர் பிரிவில் போட்டி போடுகின்றனர்.

Paris 2024 Olympics:டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் 68 புள்ளிகளுடன் 30ஆவது இடம்!

தீரஜ் நாளை நடைபெறும் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லீ என்பவருடன் தனிநபர் பிரிவில் போட்டியிடுகிறார். இதே போன்று இங்கிலாந்தை சேர்ந்த டாம் ஹால் என்பவருடன் தருண்தீப் ராய் மோதுகிறார். இந்தப் போட்டி 31ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி போட்டியாக பிரவீன் ரமேஷ் ஜாதவ் சீனாவின் காவ் வென்ஜாவோவை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட்1 ஆம் தேதி நடைபெறுகிறது.

டென்னிஸ், நீச்சல் போட்டிகளில் பதக்கமே இல்லாமல் வெளியேறிய இந்தியா; ஏமாற்றிய ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் நடராஜ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios